ஜி.வி.பிரகாஷின் “கள்வன்” பட டிரெயிலர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

பிவி ஷங்கர் இயக்கத்தில், ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார்- பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இவானா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. கிராமத்துக்கு அருகே இருக்கும் காடு ஒன்றில் யானை புகுந்து விட அதை பிடிக்க கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். அந்த சமயத்தில் ஜி வி பிரகாஷும் அவர் நண்பரான தினாவும் ஏதோ திருட முயல நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக சொல்லியுள்ளனர்.