“பருத்திவீரன்” திரைப்படத்திற்கான பிரச்னை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை ஞானவேல் ராஜா இதற்கு வருத்தம் தெரிவித்தவுடன் முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டது.
ஆனால் இப்பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தற்போது சசிக்குமாரின் அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை ஞானவேல் ராஜாவுக்கு எழுப்பி சசிகுமார் வெளியிட்ட அறிக்கையில், “அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா, அப்படி எனில் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம். இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.