“டிரைவர் ஜமுனா” டிரெயிலர்!

Filed under: சினிமா |

“டிரைவர் ஜமுனா” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷூம் ஒருவர். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று “டிரைவர் ஜமுனா.” இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரது கவனத்தை பெற்றது. போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும், காரின் முன் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது. கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. “வத்திக்குச்சி” படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.