“என் தந்தை தான் பான் இந்தியா சினிமாவின் முன்னோடி” என “விருமன்” திரைப்படத்தின் கதாநாயகியான அதிதி சங்கர் அவரது தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
முன்னணி இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான ஷங்கர் தனது 59வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “விருமன்” படத்தின் கதாநாயகியும் இயக்குனர் சங்கரின் மகளுமான அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு சினிமா வாழ்க்கையை கொடுத்த மனிதரும், இந்திய சினிமாவில் பான் இந்தியா சினிமாவுக்கு முன்னோடியும், சினிமா திரையில் மனதைக் கவரும் காட்சிகளை இயக்குபவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் என்னை கவர்ந்து கொண்டே இருக்கிறீர்கள் ஷங்கர் சார். ஆனால் என் அப்பாவாக இருப்பதற்காக உங்களுக்கு முதல் நன்றி” என பதிவிட்டுள்ளார்.