தனி நீதிபதி வேல்முருகன் கூறிய “காவல் துறையில் இருக்கும் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்தான்” என்ற கூறிய கருத்தை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நீக்கியுள்ளனர். தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்துகளை நீக்கக் கோரி டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரனை இன்று உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ், நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என டிஜிபி தரப்பில் வாதப்பட்டது.
இதையடுத்து, தனி நீதிபதியின் கருத்து நீக்கம் செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் ஆகிய இருவரும் உத்தரவிட்டார்கள்.
Related posts:
உச்சநீதிமன்ற நீதிபதியாகும் சுந்தரேஷ் வரலாற்று தீர்ப்புகளை வழங்க வாழ்த்துகள் - மருத்துவர் ராமதாஸ் !
காவலர் தற்கொலை! சென்னையில் அதிர்ச்சி!
பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.
வேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக !



