தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Filed under: சென்னை |

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதை அடுத்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனுஷ் வீட்டுக்கும் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் முடிவில், அது புரளி என்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்பு விசாரணையில் நடத்திய காவல் துறை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்வர் தான் மிரட்டல் விடுத்துள்ளான். இதற்கு முன்பே நடிகர் விஜய், அஜித், ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. புவனேஷ்வர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.