தமிழகம் புரட்சித்தலைவியை முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயநல அதிகாரிகளின் சதிவலையில் சிக்கிக்கொண்டு தவிப்பதாக தலைநகரில் கூறுகிறார்கள். அதில் முக்கியமானது தமிழக மக்கள் தினந்தோறும் அனுபவிக்கும் மின்வெட்டு என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
தமிழக மின்சார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்வது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற மத்திய அரசு நிறுவனம். நிலக்கரி, பூமிக்கடியில் நெய்வேலியிலிருந்து ஜெயங்கொண்டம் வரை சுற்று பரப்பளவில் அதிகம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அளவற்ற நிலக்கரியை தோண்டி எடுத்து மின்சாரம் தயாரித்து, தமிழகத்தை மின்வெட்டற்ற மாநிலமாக மாற்றக்கூடிய மேலும் 2வது கட்ட விரிவாக்கத்தில் மின்சாரம் தயாரிப்பதில் முனைப்பை காட்டியிருந்தால், எளிதாக 2500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இங்குதான் மத்திய அரசும் தேசிய கட்சிகளும் தமிழக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, தமிழகத்திற்கு ஆப்பு அடித்துள்ளார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளதாம்.
நெய்வேலி நிறுவனம் 2 கட்டமாக மின்சாரம் தயாரிக்கிறது. முதல் கட்டம், அதன் விரிவாக்கம் என்ற ஒரு பிரிவாகவும், 2வது கட்டமாக அதன் விரிவாக்கம் என்று மறு பிரிவாகவும் மின்சார உற்பத்தி செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார்கள். 2வது கட்ட விரிவாக்க பணிகள் நல்ல முறையில் முயற்சி எடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு கேடு விளைவித்ததாக மத்திய அரசையும், நெய்வேலி நிறுவன மூத்த அதிகாரிகளையும் குற்றம் சாட்டுகிறார்களாம். காரணம் 2வது கட்ட விரிவாக்க முயற்சிக்கு தரமற்ற அல்லது குறைந்த திறன் உடைய உபகரணங்களை ஆதரித்து மற்றொரு மத்திய அரசு நிறுவனம் மூலம் நிறுவி உள்ளார்களாம். இதனால் 2வது கட்ட விரிவாக்கத்தில் மின்சாரம் தயாரிக்கும் போது எல்லாம் பழுதடைந்து போவதாக கூறப்படுகிறது.
இதனை உடனடியாக சீர்படுத்தி, செயல்படுத்த அந்த உபகரணங்களை நிறுவிய மத்திய அரசு தயாராக உள்ளதாம். ஆனால் தமிழர்களின் நலனை புறக்கணித்து, புரட்சித்தலைவிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்ட சதியாக நினைத்து தற்போது நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை என்ற வதந்தி பரவுகிறது.
மேலும் தமிழர், தமிழ் என்று மாரடிக்கும் அரசியல் கட்சிகளும் தமிழர்களின் வாழ்வை சூன்யமாக்கிய மத்திய அரசின் நிறுவன சீர்கேட்டை தட்டிக்கேட்க தயங்குகிறார்களாம். தமிழக கட்சிகளின் நெய்வேலி நிறுவன தொழிலாளர்கள் பேரவைகளின் தலைவர்கள், இந்த உண்மையை அறிந்தும் அடிமை ஆகிவிட்டார்கள் என்ற கசப்பான உண்மை வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெய்வேலி நகரில் மக்களாக தங்கள் மின்சாரத் தேவைகளை நிறுத்தினால் மட்டும் மின்சார வெட்டு வரும் என்கிறார்கள்.
தமிழக அரசும் தமிழக தலைவர்களும், தமிழக மத்திய அமைச்சர்களும் உடனடியாக செயலில் இறங்கி, நெய்வேலி நிறுவனத்தின் 2ம் கட்ட விரிவாக்க நிலக்கரி தோண்டும் பணியை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கட்டளை இடுகிறார்களாம். தமிழன் பேரைச்சொல்லி தமிழர்களை ஏமாற்றும் தமிழக கட்சிகள், தமிழ்குலத்தை நிலைநாட்ட தமிழ்நாட்டில் தின்ற உணவுக்காக உழைக்கவேண்டும் என்ற சபதத்தை புத்தாண்டு உறுதிமொழியாக எடுக்கவேண்டும்.