“கோவேக்சின்” தடுப்பூசி மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி!

Filed under: இந்தியா |

“கோவேக்சின்” தடுப்பூசி மருந்தை விலங்குகளுக்கு செலுத்தப்பட்டதில் நல்ல பலன் கொடுத்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனமும் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஒன்றிணைத்து கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி மருந்தாக கோவேக்சினை தயாரித்துள்ளனார். இந்தியாவில் 12 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இந்த மருந்தை பரிசோதனை செய்யப்படுகிறது.

20 செம்முகக் குரங்குகளை கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் கோவேக்சின் தடுப்பு மருந்து கொரோனாவை எதிர்த்து எதிர்ப்பு சக்தி உருவாக்குவதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்பே, இரண்டாவது கட்ட தடுப்பூசி பரிசோதனையை பாரத்பயோ டெக் நிறுவனம் செய்ய அனுமதி அளிக்ககப்பட்டுள்ளது.