தமிழில் பேசிய மாணவனை தாக்கிய ஆசிரியை !

Filed under: சென்னை |

மாணவர் ஒருவர் தமிழில் பேசியதால் ஆசிரியை மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை நாயகி என்பவர், அவ்வகுப்பைச் சேர்ந்த மாணவன் தமிழில் பேசியதால் ஆத்திரமடைந்து அவரது காதைப் பிடித்துத் திரிகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியை மீது ராயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.