கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாங்கிய ரூ.3 கோடிக்கு கணக்கு இருக்கிறதா எனக் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அக்கட்சியினர். நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இரண்டு தொகுதிகளும், 15 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது. தொகுதிக்கு, 6 கோடி வீதம் 12 கோடி ரூபாயை செலவழித்து விட்டு மீதம் 3 கோடி ரூபாயை, தி.மு.க.,விடமே திருப்பி கொடுத்து விட்டதாக நிர்வாகிகள் சொல்லி இருக்கிறார்கள். ”இதை சில நிர்வாகிகள் நம்ப மறுத்து, ‘அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என கேட்டு இருக்கிறார்கள். அதே மாதிரி, அந்தக் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவோரை, கட்சியில் இருந்து நீக்கி விடுவதாகவும் புலம்பல்.இதற்கு, மாநில பொறுப்பில் இருக்கிற எம்.பி., ஒருவரும் ஆதரவாக இருப்பதாக புகார்.