#BREAKING: தமிழகத்தில் இன்று 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: சென்னை |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 1,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தமிழகத்தில் 65 பேர் பலியாகியுள்ளனர். அதில் சென்னையில் 39 பேர் பலியாகி உள்ளனர்.

பின்னர் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 1,18,594 பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் சென்னையில் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,636 பேர் பலியாகி உள்ளனர், 71,116 பேர் குணம் அடைந்துள்ளனர்.