சுப்ரீம் கோர்ட்டில் சிறைகளில் இட நெருக்கடி அதிகரித்து வருவதை அடுத்து திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கலாம் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறைகளில் இடநெருக்கடிகளை குறைக்க திறந்தவெளி சிறைகள் மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் இட நெருக்கத்தின் தீர்வு காண்பது மட்டுமின்றி கைதிகள் மறுவாழ்வுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி சிறை மூலம் சமுதாயத்துடன் கைதிகளை ஒருங்கிணைக்க செய்ய முடியும் என்றும் சிறைக்கு வெளியே இயல்பான வாழ்க்கை நடத்துவதில் கைதிகள் சந்திக்கும் மன உளைச்சலை குறைக்க இந்த நடைமுறை உதவும் என்றும் வாதிடப்பட்டது. சிறை சீர்திருத்தங்கள் தொடர்பான இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் குறித்து நாங்கள் எதையும் பரிந்துரை செய்ய முடியாது என்றும் இது தொடர்பான மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவ்வழக்குகளின் தீர்ப்பு வந்தவுடன் இதற்கான தீர்வு காணலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் ஆஜரான தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் வழக்கறிஞர் திறந்தவெளி சிறை குறித்து அனைத்து மாநிலங்களிடமும் கருத்து கேட்கப்பட்டதாகவும் 24 மாநிலங்கள் இதற்கு பதில் அளித்துள்ளதாகவும் கூறிய நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 16ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.