திருவண்ணாமலைக்கு இன்று முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ரயில் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்க வேண்டும் என்று நீண்டநாளாக பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று முதல் சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மே 2ம் தேதி முதல் இந்த ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் இந்த ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.