ஆகஸ்டு 27ம் தேதி முதல் சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கிடையே இயங்கி வரும் மின்சார ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ரூபாய் 279 கோடி செலவில் நான்காவது ரயில் தடம் சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூருக்கு இடையே அமைக்கப்பட்டவுள்ளது. இப்பணியை 7 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியின் காரணமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்படும் என்றும் மீண்டும் சேவை தொடங்கும் தேதி பின் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Related posts:
முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !
3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி இராமதாஸ் !
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு - சீமான் ஆறுதல்!
வடகிழக்குப் பருவமழைக்காக முதலமைச்சரின் உத்தரவு!



