தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த அன்சு பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., நேற்றுடன் ஒய்வு பெற்றதையடுத்து, புதிய செயலாளராக கே.ராஜாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக இவர், மத்திய நிதியமைச்சக்தின் பொருளாதார விவகாரத்துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார்.
கடந்த 1989 ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய அரசின் பல பதவிகளை வகித்துள்ளார். தமிழக அரசிலும், சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன நிர்வாக இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.