நகைக்கடையில் கொள்ளை!

Filed under: சென்னை |

நகைக்கடையில் திருடன் சட்டையே போடாமல் வந்து திருட்டை நடத்தி போன சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வந்த ப்ளூஸ்டோன் என்ற நகைக்கடையில் புகுந்த கொள்ளையன் அங்கிருந்த ஷோகேஸில் வைத்திருந்த தங்க, வைர நகைகளை திருடியுள்ளான். மேலும் லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தப்பியுள்ளான். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து சில மணி நேரத்தில் கொள்ளையடித்த வடமாநில இளைஞரை டீசர்ட்டை அடையாளமாக வைத்து கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரித்ததில் அசாமைச் சேர்ந்த 3 சிறுவர்களின் கைவரிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் 1.5 கோடியாகும். சட்டையை கழற்றி முகத்தை மறைத்து கொண்டு இளைஞர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.