நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஒரு நாள் முன்னதாகவே விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டள்ளனர்.

வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம் விஜய்66. இப்படத்திற்கு “வாரிசு” என்று, the boss returens என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில், விஜய் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் பிறந்த நாளான இன்று மற்றொரு போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது. படத்தின் டைட்டில் எப்படி கிடைத்தது என்பது பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. படக்குழு விஜய்66 படத்திற்குதான் இந்த டைட்டில் வேண்டும் என யாரிடமாவது சொன்னால் இதற்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்று ரகசியதாக தேடியுள்ளது. இப்படத்திற்கு வாரிசு என்ற டைட்டில் கண்ணன் என்ற தயாரிப்பாளரிடம் இருந்துள்ளது.
அதன்பிறகு, ஒரு டம்மி தயாரிப்பாளரை செட் செய்து, அந்தக் கண்ணன் என்ற தயாரிப்பாளரிடம் சென்றுபோய் பணத்தை செட்டில் செய்து, அவரிடமிருந்து என்.ஓ.சி பெற்று வந்த பிறகுதான், இப்படத்திற்கு டைட்டில் உருவானது எனக் கூறப்படுகிறது.