நடிகை சாயிஷா சிம்புவின் திரைப்படத்திற்காக தான் டான்ஸ் ஆடியதை குறித்து மனம் திறந்துள்ளார்.
பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. இவர் “கஜினிகாந்த்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் சில வருடம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் சாயிஷா. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” படத்தில் “அடாவடி” என்ற ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஆடியுள்ளார். இதை குறித்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இப்போ இது தேவையா? என பலரும் அவரை விமர்சித்தனர். இது குறித்து முதன் முறையாக பேசியுள்ள சயீஷா, “எனக்கு மிகவும் பிடித்ததை செய்வதர்க்கு நான் மீண்டும் வந்து விட்டேன். அது நடனம் தான். “பத்து தல” திரைப்படத்தில் உள்ள இந்த அற்புதமான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். “பத்து தல” படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் உங்களுக்கு பிடிக்கும் ஏற்று நம்புகிறேன்” என பதிவிட்டு அதனுடன் “அடாவடி” பாடலின் போஸ்டரையும் பதிவிட்டிருக்கிறார்.