சென்னை சூளைமேடை சேர்ந்தவர் மணிமாறன். இவர் சென்னை பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். தற்போது உடல் நிலையில் மோசமானதால் சென்ற மாதம் 11ஆம் தேதி குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துத்தனர்.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பின்னர் அவருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.
மேலும், பட்டினப்பாக்கத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் அவருடைய திருவுருவப் படத்துக்கு மலர்தூவி காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்றனர்.
இவர் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது காவல் அதிகாரி. இதற்கு முன்பு தி.நகர் காவல் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.