இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 94,612 போ் குணமடைந்துள்ளனர். இதன் விகிதம் 79.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-1-.jpg)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 54,00,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 86,752 பேர் உயிரிழந்துள்ளனர், 43,03,043 குணமடைந்துள்ளனர். மேலும், 10,10,824 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
தற்போது குணமடைந்தோர் விகிதம் 79.7 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.6 சதவீதம் குறைவாக உள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 12,06,806 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,36,61,060 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.