நடிகை ராஷ்மிகாவின் வீடியோ வைரல்!

Filed under: சினிமா |

இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். இவர் “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இப்படத்தின் மூலம் இவருக்கு விருதுகள் குவிந்தது.

அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு என்று பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் “கிரிக் பார்ட்டி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் “கீதா கோவிந்தம்“ ஹிட்டால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். அவ்வப்போது ரகசியமாக காதலன் விஜயதேவரகொண்டாவுடன் டிரிப் அடித்து வருகிறார். தற்போது தன் செல்ல நாய்குட்டியுடன் புரண்டு விளையாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, “என் அன்பர்களே உங்களுக்கு எங்களிடமிருந்து காதலர் தின வாழ்த்துக்கள்” என தலைப்பு கொடுத்துள்ளார்.