நல்லகண்ணு உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Filed under: அரசியல்,சென்னை |

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நல்லகண்ணு தனது 97வது பிறந்தநாளை கொண்டாடினார். வயோதிகம் மற்றும் சில உடல் நலப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நல்லகண்ணு. அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கிருமி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நுரையீரல் தொற்றும் அவருக்கு உள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நலமடைந்து வருவதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.