1985ம் ஆண்டு வெளியான “கல்யாண அகதிகள்” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் நாசர். இத்திரைப்படத்தை இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கினார். அதைத் தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
நடிப்போடு மட்டுமல்லாமல் இவர் ஒரு டப்பிங் கலைஞர், பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவர். நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், உண்மையாகவே இவையெல்லாம் வதந்திகள் மட்டுமே. தற்போது நடிகர் நாசர், வெப் சீரிஸில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.