முதல் தடவ எங்களை கஷ்டப்படுத்திட்டியே அண்ணா; வடிவேல் பாலாஜி பற்றி தீனா உருக்கமான பதிவு!

Filed under: சினிமா |

சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவு செய்தியை அறிந்த பெரிய திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

விஜய் சேதுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று இருக்கிறார். நேற்று மாலை நுங்கபக்கத்தில் உள்ள மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

வடிவேல் பாலாஜி திடீர் மறைவு சின்னத்திரை பிரபலங்களை பெருமளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் வேலை பார்த்த சக கலைஞர்கள் இன்னும் அவருடைய மறைவிலிருந்து நீங்காமல் உள்ளனர். அந்த வரிசையில் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு சென்றவர் நடிகர் தீனா.

இவர் கைதி, மாஸ்டர் உள்பட முக்கிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேல் பாலாஜி பற்றி ஒரு உருக்கமான கவிதையை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியது;
என்னை தட்டி கொடுத்த முதல் கை நீ….

என்னை பேச வைத்த என் குருவும் நீ…

அன்பை அள்ளி கொடுத்த என் அண்ணன் நீ….

அயராது உழைக்கும் ஒரு சிறந்த கலைஞன் நீ…

எங்களுக்கு நீ மறுபடியும் வேண்டும் எழுந்து வா .. இல்லையென்றால் பிறந்து வா…

முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே…

https://www.instagram.com/p/CE_JhW6HQzK/?igshid=1ou8tcxulm639