கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஆம்புலன்ஸுகாக பல மணி நேரம் காத்திருந்து உயிரிழந்தார்!

Filed under: இந்தியா |

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரியவர் ஆம்புலன்ஸுகாக காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள ஹனுமத் நகரை சேர்ந்த 65 வயது பெரியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வெளியே வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏதாவது நினைப்பார்கள் என தெரு முனைக்கு வந்துள்ளார். மறு முனைக்கு வரும் உணவில் காத்து காத்து முனையில் வெயிட் பண்ணி இருக்கார்.


ஆனால், பல மணி நேரம் ஆம்புலன்ஸ் வராததால் ஆட்டோ பிடிப்பதற்கு உறவினர்கள் செல்ல நினைத்த போது பெரியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனிடையே அவரின் உடல் சாலையிலேயே கிடந்துள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.