பள்ளிக்கல்வித்துறை சாதி அடையாள கயிறுகளுக்கு தடைவிதித்து உத்தரவு

Filed under: Uncategory |

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பள்ளிகளில் சாதியை அடையாளமிட்டு காட்டுவதற்காக கட்டப்படும் கயிறுகளுக்கு தடை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் பள்ளிகளில் சாதி அடையாள கயிறு கட்டும் மோதல் காரணமாக நெல்லை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தால் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்றும், சாதி அடையாள கயிறுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்களை எச்சரிக்க வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.