பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைத்தது செல்லாது; நீதிமன்றம் தீர்ப்பு!

Filed under: உலகம் |

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் இம்ரான் கானை நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது அதிபர் ஆரிப் ஆல்வியின் உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் என்றும், அதனால் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அறிவுறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.