பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Filed under: விளையாட்டு |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது சிக்கல் உண்டாகி உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. இதனால் 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

இதனால் இந்த வீரர்களுக்கு அவர்களுடைய வீடுகளிலேயே முதல்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் இளம் வீரர்கள் ஹைதர் அலி, ஷாதப் கான், ஹாரிஸ் ராப் என மூன்று வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

பின்னர் நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் காஷிப் பட்டி, முகமது ஹஸ்னைன், பகர் ஜமான், முகமது ரிஸ்வான், இம்ரான் கான், முகமது ஹபீஸ், வகாப் ரியாஸ் என ஏழு வீரர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. பிறகு ஒரு உதவி பணியாளருக்கு தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லாகூரில் வீரர்களுக்கு இரண்டாவது கட்ட பரிசோதனை நடத்தப்படயுள்ளது. இதனிடையே புதிய வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்படும். இதன் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 28ஆம் தேதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயம் மேற்கொள்ளயுள்ளனர். ஆனால், இந்த தொடர் நடைபெறுமா என சந்தேகம் வந்துள்ளது.