சீமான் ஒரு பாஜக அடிவருடி என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி கடுமையாக சாடியுள்ளார். சீமான் குறித்து ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டதாவது :
சீமான் ஒரு பாஜக அடிவருடி, பாஜக வெறுப்பு புரையோடிக்கிடக்கும், கல்வி,வேலைவாய்பு, தொழில், சமூகநீதியை முன்னிறுத்தும் தமிழகத்தில், தன்னால் நேரடியாக களமிறங்கி மத, கலவர அரசியலை செய்ய முடியவில்லை என்பதால் பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது. எச்சரிக்கை தேவை என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் சீமான் முன்னிலையில் துரைமுருகன் பேசியதை மேற்கோள் காட்டி நான்கு நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என டிஜிபி-யிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் பாராளமன்ற உறுப்பினர் ஜோதிமணி புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.