முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு “பாரத்” என இந்தியாவை அழைப்பதை தவறு என்று கூற முடியாது, ஏனெனில் பாரத் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்ற பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி டிஆர் பாலு கூறும் போது, “பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை. பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதால் பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. அதே நேரத்தில் இந்தியா பெயரை உச்சரிக்க பாஜக பயப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.