பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்!

Filed under: இந்தியா |

லாரியில் வைத்து பழுதடைந்த விமானத்தை எடுத்துச் சென்றபோது பாலத்தில் திடீரென சிக்கிக் கொண்டது. இதையடுத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழைய ஏர் இந்தியா விமானத்தை மும்பையிலிருந்து அசாம் மாநிலத்திற்கு லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டதாகவும் லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் லாரி டிரைவர் பாலத்தின் அடியில் எப்படி விமானம் உள்ள லாரியை ஓட்டிச் செல்லலாம் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.