“பிச்சைக்காரன்” திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “பிச்சைக்காரன் 2” திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நாளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ருத்ரன்” திரைப்படமும் ரிலீசாகிறது. “பிச்சைக்காரன்” திரைப்படத்தை பிரபல விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக பிரபல நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருகிறது.