பிரதமர் மோடி சுவாமி விவேகானந்தரின் மறுபிறவி!

Filed under: அரசியல்,இந்தியா |

பாஜக எம்.பி. சுவாமி விவேகானந்தரின் மறுபிறவிதான் பிரதமர் மோடி என பேசியுள்ளார்.

நேற்று விவேகானந்தரின் 160 வது தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்பி சௌமித் கான் பேசிய போது, “பிரதமர் மோடி வடிவில் விவேகானந்தர் மறுபிறவி எடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தர் கடவுளுக்கு நிகரானவர், தனது தாயாரை இழந்த போதும் பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக தனது அர்ப்பணித்து கொண்டதை பார்க்கும்போது நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் மோடி என்று எனக்கு தோன்றுகிறது” என்று பேசியுள்ளார். பாஜக எம்.பி. இப்பேச்சுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.