பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி!

Filed under: சினிமா |

சமீபத்தில் நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் நடித்த ‘மிரள் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்திருந்தனர். சமீபத்தில் இயக்குனர் சக்திவேல் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர் முழுமையாக குணமாகியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.