எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான் – நடிகர் ரமேஷ் திலக் அறிவிப்பு!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக். இவர் சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதன்பிறகு காக்காமுட்டை, வேதாளம், கபாலி உள்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் ரமேஷ் திலக்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டது: எனக்கு ஒரு தலைவன் பிரிந்து இருக்கிறான் என பதிவிட்டுள்ளார். இதன் பிறகு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/thilak_ramesh/status/1288659363112947712

இன்று ஜூலை 30ஆம் தேதி அர்னால்ட், டயானா போன்ற முக்கிய பிரபலங்கள் பிறந்த தினத்தில் உங்களுடைய மகன் பிறந்திருப்பதால் அவரும் பிரபலமாக வருவார் என வாழ்த்தியுள்ளனர்.

நடிகர் ரமேஷ் திலக் சினிமா துறைக்கு வரும் முன்பு ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்துள்ளார். சென்ற 2018 ஆம் ஆண்டு ஆர்ஜ் வாக வேலை பார்க்கும் நவலட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நவலட்சுமி பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.