பிரபல ரவுடி படுகொலை!

Filed under: சென்னை |

ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை பள்ளிக்கரணையில் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணையிலுள்ள அம்பேத்கர் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்கள் ஆயுதங்களோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். அதற்குள் அங்கு ரவுடிகள் தப்பி சென்று விட்ட நிலையில் புதர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். விசாரணையில் உயிரிழந்தவர் ரவுடி ப்ரைட் ஆல்வின் என்பதும், அவர்மேல் ஏற்கனவே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. ஆல்வினை கொன்றவர்கள் யார்? முன்பகை காரணமாக கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்த கேங் வாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.