பிரியங்கா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்!

Filed under: அரசியல்,இந்தியா |

பிரியங்கா காந்தி இந்திய இளைஞர்கள் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியங்கா காந்தி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மோடி அரசை நோக்கி அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர், “இந்திய இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஏன்? ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? நாட்டில் 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்? ஒவ்வொரு தேர்வுக்கும் வினாத்தாள் கசிவது எப்படி?” இப்படி கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் என்ன பதில் கூறப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தியாவில் 83 சதவீதம் பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பது உண்மையா? என்றும் அத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்றும் நெட்டிசன்கள் பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.