பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவி ஒருவர் மனவிரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறவில்லை என்ற காரணமாக திருவள்ளூரை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனவிரக்தியில் இருந்துள்ளார். அவர் பிளஸ் டூ தேர்வில் 600க்கு 430 மதிப்பெண் பெற்றுள்ளார். 500க்கு மேல் அவர் எதிர்பார்த்ததாகவும் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றறு கூறப்படுகிறது. திடீரென குறைந்த மதிப்பெண்ணால் அதிருப்தி அடைந்த மாணவி இன்று தற்கொலை செய்து கொண்டதை அடுத்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.