புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

Filed under: Uncategory |

உலகத்தையை நம் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்போனின் அவசியம் பெரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் ஆப் பெரிதளவில் மக்கள் மத்தியில் உபயோகிக்கும் ஒரு செயலியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உருமாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப பல சிறந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் இனி அதிகபட்சமாக குரூப் கால் பேசும்போது, 32 பேருடன் குரூப் கால் பேசலாம் என வாஸ்ட் ஆப் வலைதளத்தின் தகவல் FAQ என்ற பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. முன்னதாக நான்கு பேரும் வாய்ஸ் கால் பேசலாம் என்ற நிலையில், 2020ம் ஆண்டில் இது அதிகரிக்கப்பட்டது. இந்த அம்சம் 2.22.8.80 வெர்சனிலும், 2.2.9.73 வெர்சனிலும் வழங்கப்பட்டுள்ளது. இனி அதிகபட்சமாக ஒரே நேரத்தில் குரூப் காலில் 32 பேருடன் வாய்ஸ் கால் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாஸ்ட் ஆப் வலைதள வீடியோ காலுக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. மேலும் ஸ்டேட்டஸிலும் புதிய ஆப்சன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.