நேற்று முன்தினம் மாலை குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக கரையைக் கடந்தது.

இப்புயலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. புயல் கரையைக் கடந்த 140 கிமீ வேகத்தில், குஜராத்தில் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இப்புயலின்போது, மொத்தம் 1171 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். இதில் 707 கர்ப்பிணிகள் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர். இதுபற்றி குஜராத் மாநில சுகாதாரத்துறை முன்பே கர்பிணிகள் பட்டியலை தயார் செய்து இதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, கர்ப்பிணிகள் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். பிபர்ஜாய் புயலின்போது குஜராத்தில் 770 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
Related posts:
ரூபாய் 20,050 கோடியில் மீன்வளத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
கழிவறையில் ரகசிய கேமரா: 2000 ஆபாச வீடியோக்கள்!
நவம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் திறப்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!
தகுதியான அனைவருக்கும் அச்சம் கொள்ளாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் - நிர்மலா சீதாராமன் கோரிக்கை!



