இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உட்பட பல வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “அச்சமின்றி தேர்வு எழுதுங்கள். இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ‘பொதுத்தேர்வு’ எனும் அனுபவத்தை எதிர்கொள்ளுங்கள். இத்தனை நாள் கற்றுக்கொண்டதை அச்சமின்றி எழுதுங்கள். வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது என்பதை மறவாதிருங்கள். வெற்றி நிச்சயம் உங்களை தழுவிக்கொள்ளும்” என்று பதிவிட்டுள்ளார்.