பொன்முடி மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. அவ்வகையில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இத்தொகுதியில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தொகுதியை விசிகவுக்கு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது