தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்யும் சேவையில் விரிவாக்கம் செய்து புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பல பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் பயணிக்க ஒரு மாதத்திற்கு முன்பே இருக்கைகளை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். அதேபோல தற்போது தமிழக மாவட்டங்களுக்குள் 200 கி.மீ தொலைவிற்கு பயணிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு இந்த சேவை விரிவாக்கம் மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு முன்பதிவு செய்யும் இருக்கை எண்ணிக்கை 51,046ல் இருந்து 62,464 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வழக்கமாக முன்பதிவு செய்ய பயன்படுத்தும் tஸீstநீ.வீஸீ இணையதளத்திலோ அல்லது டிஎன்எஸ்டிசி மொபைல் செயலியிலோ முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.