கோவை, மே 6
கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தப்படியே ஈஷா யோகா வகுப்பை ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார்.
மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேக லாகின் விவரங்கள் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் மொபைல் அல்லது கணினியில் 7 வீடியோக்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு வீடியோவும் 60 முதல் 90 நிமிடங்கள் இருக்கும்.
அதில் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலைகள் குறித்து சத்குரு மிக ஆழமாகவும், எளிமையாகவும் விளக்கி இருப்பார். மேலும், எளிமையான அதேசமயம், சக்திவாய்ந்த வழிகாட்டு தியானங்களும் இடம்பெற்று இருக்கும்.
தற்போதைய சவாலான சூழலில் பலரும் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மன ரீதியாகவும், உணர்ச்சி நிலையிலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, அவர்கள் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு அமைதியான, ஆனந்தமான மனிதராக மாறுவதற்கு இவ்வகுப்பு பேருதவியாக இருக்கும்.
நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு வகுப்பை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற தொன்மையான, சக்திவாய்ந்த க்ரியாவுக்கு நேரில் தீட்சை வழங்கப்படும். ஈஷாவின் ஆரம்ப நிலை வகுப்பான இதில் பங்கேற்றதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் அடிப்படையே மாற்றம் கண்டுள்ளது என்பது வரலாற்று ரீதியான சான்றாக உள்ளது.
சத்குரு அவர்களால் எந்தவித மத நம்பிக்கையும் இன்றி, முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வகுப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆன்லைன் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்க tamil.sadhguru.org/IYO என்ற இணைதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈஷா அறிவிப்பு.