மாடுகளுக்கு கட்டாயம் லைசென்ஸ்!

Filed under: இந்தியா |

மாடுகளை வளர்க்க லைசென்ஸ் கட்டாயம் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள் எருமை மாடுகள் வளர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் லைசென்ஸ் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் மாடுகள் நகர்ப்புறங்களில் வழிதவறி சுற்றித்திரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் மாடுகள் வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.