மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் தலைமறைவு!

Filed under: சென்னை |

10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய நிலையில் தலைமறைவாகி உள்ளதையடுத்து அந்த மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகிலுள்ள மாணவர் அந்த மாணவியுடன் சகஜமாக பழகி உள்ள நிலையில் திடீரென மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்திற்கு காரமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் அந்த மானைப் பிடிக்க வலை வீசு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கர்ப்பமான மாணவி ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரது வீடுகளும் அருகருகே இருந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.