மாயாவதி உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னால் முதலமைச்சரும், பகுஜன் சமாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். ஆனால் திடீரென ஆகாஷ் ஆனந்த் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதாக மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
இச்செய்தி உத்தரப்பிரதேச மாநில ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து மாயாவதி அளித்துள்ள விளக்கத்தில், “ஆகாஷ் ஆனந்த் இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை. அதுவரை அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கட்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகாஷ் தந்தை ஆனந்தகுமார் வழக்கம் போல் கட்சியில் உள்ள தனது பொறுப்பை தொடர்ந்து செய்வார். இது ஒரு நபருக்கான கட்சி அல்ல, இது ஒரு மக்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்திற்காக நாங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளோம். இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல இளைய தலைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் எனது அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டார், ஆனால் அதே நேரத்தில் இன்னும் அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதால் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.