மாரிசெல்வராஜ் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடித்த “கர்ணன்,” உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு “மாமன்னன்” திரைப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “நான் முதல் முதலாக திரைப்படம் எடுக்க வேண்டும் என ஆசைபட்ட போது எழுதிய கதைதான் “வாழை.” அதை 50 லட்ச ரூபாய் செலவில் எடுத்துவிடலாம் என நினைத்தேன். “பரிபேறும் பெருமாள்,” “கர்ணன்,” “மாமன்னன்” என அடுத்தடுத்து படங்கள் பண்ணினேன். ஆனாலும் “வாழை” என் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அப்படிதான் இந்த படம் தொடங்கியது. என் வாழ்வில் நடந்த மீளமுடியாத துயரம்தான் “வாழை” திரைப்படம்” என பேசியுள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவுள்ளது.