நாகை, ஏப்ரல் 25
மூர்த்தி (எ) சிற்பி
ஐந்து மாற்றுத் திறனாளி குடும்ப நபர்களுடன் வசித்து வரும் திருமணஞ்சேரி கோவிலின் ஊழியருக்கு, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, நிவாரண உதவிகளை செய்துள்ளது.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி என்ற கிராமத்தில், புகழ்பெற்ற கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருமணம் தடை உள்ளவர்கள், இக்கோவிலுக்கு சென்று வந்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இக்கோவிலில் பணிபுரியும் முரளி என்பவரின் குடும்பத்தினர் ஐந்து பேரும் மாற்றுத் திறனாளிகள். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் முரளியின் குடும்பத்திற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் இராம.சேயோன் என்பவர், நிவாரண பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளார்.