புது டெல்லி, ஏப்ரல், 20
மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிஹ் உடன், பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
தங்களது நாடுகளில் தற்போதைய கொவிட்-19 பாதிப்பு நிலைமைகளைப் பற்றி இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு முறைகள் நன்றாக அமல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
மாலத்தீவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட இந்திய மருத்துவக் குழுவும், இந்தியாவால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளும், தீவுகளில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றியதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார்.
மாலத்தீவைப் போன்ற சுற்றுலாவை சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் தொற்று விடுத்துள்ள கடினமான சவால்களைப் பற்றி பேசிய பிரதமர், கொவிட்-19இன் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்க இந்தியாவின் ஆதரவு தொடருமென மாலத்தீவு அதிபருக்கு உறுதி அளித்தர்.
தற்போதைய சுகாதார சிக்கல்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பின் இதர அம்சங்கள் குறித்தும் தங்களது அலுலர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.